20வது அகவையில் - சிரச இன்று முதல் மீள் அறிமுகம்

20வது அகவையில் - சிரச - இன்று மீண்டும் மீள் அறிமுகமாகின்றது

by Staff Writer 10-06-2018 | 3:59 PM

இலங்கையின் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய பரிணாமத்திற்கு வித்திட்ட எம்.ரி.வி. / எம்.பி.சீ. ஊடக வலையமைப்பின் சிரச ரிவி இன்று தனது 20 ஆவது அகவையில் கால்தடம் பதிக்கின்றது.

1998 ஆம் ஆண்டில் மக்களின் அலைவரிசையாக தோற்றம் பெற்ற சிரச தொலைக்காட்சி புதிய பரிமாணங்களில் நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னிலை வகித்தது. இலங்கை நேயர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விருந்தாக்கும் சிரச தொலைக்காட்சி சிரச சுப்பர் ஸ்டார் ரியலிட்டி நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இலங்கையில் அறிமுகம் செய்திருந்தது. இலங்கையில் முன்னோடி நிகழ்ச்சிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சிரச தொலைக்காட்சி இன்று முதல் புதுப் பொழிவுடன் " மீள் அறிமுகம் " செய்யப்படுகின்றது. மக்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணும் சிரச தொலைக்காட்சி மக்கள் இடர்களினால் அல்லலுறும் சந்தர்ப்பங்களில் நேசக்கரம் நீட்டவும் அனர்த்த நிவாரணங்களை வழங்கவும் பின்னிற்பதில்லை.​ 20 ஆவது ஆண்டில் கால்தடம் பதிக்கும் எமது சகோதர தொலைக்காட்சி சிரச டிவிக்கு நியூஸ் பெஸ்ட்டின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.......