வௌிநாட்டிற்கு செல்வோருக்கு புதிய முறை

வௌிநாட்டிற்கு செல்வோருக்கு புதிய முறை

by Staff Writer 10-06-2018 | 4:28 PM

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வோரை மத்தல சர்வதேச விமான நிலையத்தினூடாக அனுப்புவதற்கான வேலைத்திட்டமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் அடுத்த வாரமளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்த இரு மாகாணங்களிலிருந்தும் வருடாந்தம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வௌிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதாக அவர் கூறினார். இதேவேளை மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட்ட ப்ளை டுபாய் விமான சேவை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.