யாழில் மோதல் - 17 பேர் காயம்

யாழில் மோதல் - 17 பேர் காயம்

by Staff Writer 10-06-2018 | 4:45 PM
  யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடியகாடு பிரதேசத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஊரனி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேநபர்களை பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.