கிளிநொச்சியிலும் தொடரும் கேபிள் இணைப்புக்கள்

கிளிநொச்சியிலும் தொடரும் கேபிள் இணைப்புக்கள்

by Staff Writer 10-06-2018 | 10:13 PM
வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பாற்ற முறையில் கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தமை தொடர்பில் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம் இந் நிலையில் கிளிநொச்சி மாட்டத்திலும் பாதுகாப்பற்ற வகையில் கேபில் இணைப்பு காணப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் கிளிநொச்சி மாவட்டத்தில் கேபிள் இணைப்புகளை வழங்குவதற்கான பிரத்தியேக கம்பங்கள் எதுவும் நடப்படவில்லை. இந்நிலையில் இலங்கை மின்சார சபை மின் விநியோகத்திற்காக அமைத்துள்ள மின் கம்பங்கள் ஊடாகவே கேபிள் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.