பாராளுமன்றத்தில் மற்றுமோர் விவாதம்

பாராளுமன்றத்தில் மற்றுமோர் விவாதம்

பாராளுமன்றத்தில் மற்றுமோர் விவாதம்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2018 | 4:21 pm

கணக்காய்வு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் விரைவில்

கணக்காய்வு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை விரைவில் நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தில் காணப்படும் சில சட்ட சிக்கல்களை திருத்திக் கொண்டு அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

கணக்காய்வு சட்டமூல விவாதம் தாமதடைவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

கணக்காய்வு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து,அதனை நிறைவேற்றுவது கட்டாயமானதொன்று என அமைச்சர் கூறினார்.

குறித்த சட்டமூலத்தில் காணப்படும் சிக்கல்கள் குறித்து பிரதான கட்சிகள் கலந்துரையாட வேண்டும் எனவும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

எனினும் இந்த கலந்துரையாடலை நடத்துவதில் இரண்டு தேசிய கட்சிகளுக்கும் இடையில் சிக்கல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கணக்காய்வு சட்டமூலம் தொடர்ந்தும் தாமதமாகுவது குறித்து கணக்காய்வு சேவை சங்கத்தினர் ,பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது அதிருப்தியை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்