இலங்கைக்கு மற்றுமோர் தங்கம் – பதக்கப்பட்டியலில் இலங்கை ஐந்தாம் இடத்தில்

இலங்கைக்கு மற்றுமோர் தங்கம் – பதக்கப்பட்டியலில் இலங்கை ஐந்தாம் இடத்தில்

இலங்கைக்கு மற்றுமோர் தங்கம் – பதக்கப்பட்டியலில் இலங்கை ஐந்தாம் இடத்தில்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2018 | 4:07 pm

 

18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில், ஆடவருக்கான 4 தர 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை குழாம் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

பபசர நிகு, பசந்து கொடிக்கார, ரவிஷ்க இந்திரஜித், அருண தர்ஷன ஆகியோர் இலங்கை குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர்

இவர்கள் மூன்று நிமிடம் எட்டு ஏழு பூச்சியம் செக்கன்களில் போட்டித்தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றனர்.

இதேவேளை மகளிருக்கான 4 தர 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை குழாம் வெண்கலப்பதக்கத்தை வெற்றி கொண்டது.

குழாத்தில், இஷாரா ஆதித்யா, சச்சினி திவ்யாஞ்சலி,தில்ஷி குமாரசிங்க மற்றும் அமாஷா டி சில்வா ஆகியோர் அங்கம் வகித்தனர்.

போட்டியை கடக்க மூன்று நிமிடம் 45.116 செக்கன்களை எடுத்துக் கொண்டனர்.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள், ஜப்பானில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்