துப்பாக்கிச்சூட்டில் கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூட்டில் கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூட்டில் கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Jun, 2018 | 3:29 pm

Colombo (News 1st)

காலி – ஊருகஸ்மங்ஹந்தி – கோரகீன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 10.15 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மற்றுமொருவர் கரந்தெனிய – பொரகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊருகஸ்மங்ஹந்தி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்