காத்தான்குடியில் வர்த்தகர் மீது துப்பாக்கிச்சூடு

காத்தான்குடியில் வர்த்தகர் மீது துப்பாக்கிச்சூடு

காத்தான்குடியில் வர்த்தகர் மீது துப்பாக்கிச்சூடு

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2018 | 4:28 pm

Colombo (News 1st) 

மட்டக்களப்பு – காத்தான்குடி, அலியார் முச்சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (08) 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அலியார் சந்தி, காத்தான்குடியை சேர்ந்த 67 வயதான ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

சட்டவைத்திய பரிசோதனைகளுக்காக சடலம் குறித்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்