மக்கள் சக்தி: வளர்ச்சித் திட்டங்களின் உதாரணமானது

ப்ரவுன் பல்கலைக்கழகத்தால் கிராமிய வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுதாரணமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ''மக்கள் சக்தி''

by Bella Dalima 08-06-2018 | 10:48 PM
Colombo (News 1st)  கிராமிய வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுதாரணமான மிக வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாக ''மக்கள் சக்தி'' திட்டம் ப்ரவுன் பல்கலைக்கழகத்தால் அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளரான செவான் டேனியல், ப்ரொவிடன்ஸ் ரோட் தீவில் அமைந்துள்ள உயர்தர அமெரிக்க ஐவி லீக் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியிருந்தார். International Advanced Research Institutes (BIARI) ஆனது உலகெங்கிலும் உள்ள கல்வியலாளர்களையும் பயிற்சியாளர்களையும் உலகளாவிய பிரச்சினைகளை வௌிக்கொணர ஒருங்கிணைத்து வருகிறது. சுகாதார பராமரிப்பு மற்றும் மனிதாபிமான விடயங்கள் உள்ளடங்கலான விவகாரங்களை மாற்றியமைக்கும் தளமாக சமூக தொழில்முனைப்பு விளங்குகிறது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான வாட்சன் இன்ஸ்டிட்யூட்டின் அடிப்படையில், ஆய்வுகள், போதனைகள் மற்றும் பொது ஈடுபாடுகள் மூலம் ஒரு எளிய மற்றும் அமைதியான உலகத்தை உருவாக்குவதற்காக BIARI புதுமையான, பல்வகைப்படுத்தப்பட்ட திட்டங்களை வழங்குகிறது.

ஏனைய செய்திகள்