by Staff Writer 08-06-2018 | 4:28 PM
Colombo (News 1st)
நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள பெண்களுக்கு ஜூன் மாதத்திற்குள் விசேட நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் பொருளாதார அமைச்சினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டது.
நுண் கடன் திட்டங்களால் வறிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கடனுக்கான நிவாரண சலுகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிவாரணத் திட்டத்தால் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் நன்மையடையவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.