இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் U-19 அணிக்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் தெரிவு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் U-19 அணிக்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் தெரிவு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் U-19 அணிக்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

08 Jun, 2018 | 7:55 pm

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார்.

இலங்கையில் இரண்டு 4 நாள் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்நிலையில், அர்ஜூன் டெண்டுல்கரின் தெரிவு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தேசிய அளவிலான U-19 போட்டியான கூச் பெஹர் கோப்பைப் போட்டியில் 5 ஆட்டங்களில் 18 விக்கெட்கள் எடுத்துள்ளார் அர்ஜூன்.

மத்திய பிரதேச அணிக்கு எதிராக ஒரே ஒருமுறை 5 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

அதிக விக்கெட்களைக் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் 43 ஆவது இடத்தையே அர்ஜூன் பிடித்துள்ளார்.

ஆனால், 50 விக்கெட்கள் எடுத்துள்ள ஹிமாசல் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயுஷ் ஜம்வால் இந்திய அணிக்குத் தெரிவாகவில்லை.

அவர் 19 வயதைத் தாண்டிவிட்டதால் தெரிவாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த வருடம் 19 வயதைத் தாண்டுபவர்களை அணியில் சேர்க்கக்கூடாது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெளிவான கட்டளைகளை விதித்துள்ளார். இதனால் அர்ஜூனை விட சிறப்பாக விளையாடிய வீரர்கள் தெரிவாகவில்லை என BCCI அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்