1800 திரையரங்குகளில் வௌியான காலா

1800 திரையரங்குகளில் வௌியான காலா

by Bella Dalima 07-06-2018 | 7:27 PM
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று வௌியாகியுள்ளது. உலகம் முழுவதும் 1800 திரையரங்குகளில் காலா வௌியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி விவகாரம் தொடர்பான ரஜினியின் கருத்திற்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், அவரின் இந்தப் படத்திற்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. இம்முறையும் ரஜினியின் படத்திற்கு கட் அவுட், பேனர்கள், கொடி, தோரணம் என திரையரங்குகள் அமர்க்களப்பட்டுள்ளன. ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், காலா அதிகம் அரசியல் பேசும் படமாக உருவாகவில்லை. மும்பையின் தாராவி பகுதியில் வாழும் ஏழைகளுக்கு குரல் கொடுப்பவராக ரஜினி இந்த படத்தில் நடித்திருக்கிறார். காலா ரஜினியை பா.ரஞ்சித் இயக்கிய இரண்டாவது படம் என்பதுடன், ரஜினியை மனதில் வைத்தே கதையை அவர் அமைத்திருக்கிறார். ‘காலா’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.