மஹரகமைக்கு 6 புதிய உறுப்பினர்கள்: ஐ.தே.க எதிர்ப்பு

மஹரகம நகர சபைக்கு 6 புதிய உறுப்பினர்கள் நியமனம்: ஐ.தே.க எதிர்ப்பு

by Bella Dalima 07-06-2018 | 3:52 PM
Colombo (News 1st) மஹரகம நகர சபைக்கு காந்தி கொடிக்கார உள்ளிட்ட ஆறு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்மைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வௌிநடப்பு செய்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். புதிய உறுப்பினர் நியமனம் சட்டத்திற்கு முரணானது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். காந்தி கொடிகார உள்ளிட்ட ஆறு புதிய உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். மஹரகம நகர சபைக்கு தெரிவாகிய சுயாதீன குழுவினர் இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.