பகிரங்க விவாதத்திற்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஸவிற்கு மங்கள சமரவீர சவால்

by Bella Dalima 07-06-2018 | 8:54 PM
Colombo (News 1st) பகிரங்க விவாதத்திற்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் இன்று சவால் விடுத்தார். தப்பியோடாமல் தம்முடன் பொருளாதாரம் தொடர்பில் விவாதிக்க வருமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார். நிதி அமைச்சர் என்ற வகையில், முன்னாள் நிதி அமைச்சராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஸவிற்கு தாம் சவால் விடுப்பதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த சவால் தொடர்பில் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல கருத்துத் தெரிவித்தார். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலத்தில் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸவிற்கு விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக ஜே.சி. அலவத்துவல சுட்டிக்காட்டினார். மங்கள சமரவீர ஒருபோதும் மக்கள் பணத்தை சூறையாடியவர் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டார்.