பாராளுமன்ற உறுப்பினரானார் எஸ்.எம்.இஸ்மாயில்

எஸ்.எம்.இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம

by Staff Writer 07-06-2018 | 11:45 AM
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவாவியின் வெற்றிடத்திற்கு எஸ்.எம்.இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவாவி இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கான உறுப்பினர் ஒருவரை பரிந்துரை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கட்சியின் செயலாளருக்கு அறிவித்திருந்தார். அதற்கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளரால் பரிந்துரைக்கப்பட்ட எஸ்.எம்.இஸ்மாயில் அந்த பதவி வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனத்துற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 33 ஆயிரம் வாக்குகளை எஸ்.எம்.இஸ்மாயில் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது