அர்ஜுன மகேந்திரனை தேடித்தருமாறு காணாமல்போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு

அர்ஜுன மகேந்திரனை தேடித்தருமாறு காணாமல்போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு

அர்ஜுன மகேந்திரனை தேடித்தருமாறு காணாமல்போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2018 | 12:57 pm

காணாமல்போயுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை தேடித் தருமாறு கோரி பிவிதுர ஹெல உருமய , காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

பிவிதுர ஹெல உருமய கட்சியின் இளைஞர் விவகார செயலாளர் சுகிஸ்வர பண்டார இன்று முற்பகல் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தினூடாக மோசடி செய்து அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவரும் அர்ஜுன மகேந்திரனுக்கு என்ன நேர்ந்துள்ளது என்பது குறித்து அறிவதற்கு அனைவரும் ஆர்வமாக உள்ளதாக சுகிஸ்வர பண்டார குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமையை கருத்திக் கொண்டு அர்ஜுன மகேந்திரனை தேடித் தருமாறு தாம் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்