ஆப்கானில் தற்கொலைத் தாக்குதல் - 14 பேர் பலி

ஆப்கானில் தற்கொலைத் தாக்குதல் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

by Staff Writer 05-06-2018 | 3:41 PM

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் சுமார் 3,000 மதத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் நேற்று தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றது. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் சமீபத்தில் முதன்முறையாக கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.