பிறரால் வாழ்வாதாரமிழந்த சுண்டிக்குளம் மீனவர்கள்

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுண்டிக்குளம் மீனவர்கள்

by Staff Writer 04-06-2018 | 9:33 PM

யாழ்ப்பாணத்தையும் முல்லைத்தீவையும் பிரிக்கும் பிரதான பகுதியே சுண்டிக்குளம்.இங்கு வாழும் பெரும்பாலானவர்கள் கடலட்டை பிடித்தல் மற்றும் மீனவத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

எனினும், இந்தப் பகுதிக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் வெளியூர் வாசிகள் கடலட்டைகளை பிடித்துச் செல்வதுடன் அதற்காக அவர்கள் பயன்படுத்தும் படகுகள் ஏனைய வலைகளை அறுத்துச் செல்கின்றன. குறிப்பாக தாளையடி,மருதங்கேணி, செம்பியன்பற்று, குடாரப்பு, நாகர்கோவில் ஆகிய பகுதிகளின் மீனவர்கள் கடந்த சில மாதங்களாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாரியளவிலான வாடிகளை அமைத்து தொழில் புரிவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இந்தப் பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.