வடகொரிய ஜனாதிபதிக்கு அமெரிக்காவின் சொகுசு ஆடை

வடகொரிய ஜனாதிபதிக்கு அமெரிக்காவிடமிருந்து சொகுசு ஆடை

by Staff Writer 04-06-2018 | 10:35 PM

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வடகொரிய ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பின் போது வடகொரிய ஜனாதிபதி அணிய விரும்பும் சொகுசு ஆடைக்கான பணத்தை அமெரிக்கா செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பு சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது. டொனால்ட் ட்ரம்ப், தென் கொரிய தலைவருடனான சந்திப்பின் பின்னர் எதிர்வரும் 12 ஆம் திகதி வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பறும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் வட கொரிய தலைவர் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தங்குவதற்கு கோரியிருந்ததாக வெள்ளை மாளிகையின் துணைத் தலைவரான ஜோ ஹாகின் தெரிவித்திருந்தார். சிங்கப்பூர் ஆற்றின் அருகே அமைந்துள்ள குறித்த விடுதி, மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனிடையே சிங்கப்பூர் உச்சி மாநாட்டின் செலவினங்களை சந்திக்க தயார் என சிங்கப்பூர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.