by Staff Writer 04-06-2018 | 10:40 PM
ஜோர்தானில் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று நாட்களாக பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வரி அதிகரிப்பானது, வறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைப் பாதிப்பதாகவும் இதன் பின்னணியில் சர்வதேச நாணய நிதியம் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை அடுத்து, ஜோர்தான் பிரதமர் இராஜினாமா செய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, முன்னாள் கல்வி அமைச்சர் ஒமர் அல் ரஸாக்கிற்கு புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜோர்தான் மன்னர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.
ஒமர் அல் ரஸாஸ், உலக வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.