பொலித்தீன் தடையை நீக்குமாறு கூறினர்  :  நான் இசையவில்லை – ஜனாதிபதி

பொலித்தீன் தடையை நீக்குமாறு கூறினர் : நான் இசையவில்லை – ஜனாதிபதி

பொலித்தீன் தடையை நீக்குமாறு கூறினர் : நான் இசையவில்லை – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2018 | 8:08 pm

 

 

“பொலித்தீன் தடைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் செய்த ஒரே ஒரு நாடு இலங்கையாகும். பொலித்தீன் தடை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை ரத்துச் செய்வதற்கு பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அமைச்சரவையிலும் அந்த யோசனை முன்வைக்கபப்பட்டது. எனினும் நான் அதற்கு பின்வாங்க வில்லை. அதனை ரத்துச் செய்ய முடியாது என கூறினேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுற்றாடல் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று கேகாலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்

“பிளாஸ்டிக் பாவணையினால் சூழல் மாசுபடுவதைத் தவிர்ப்போம்” எனும் தொனிப் பொருளில் இந்த வைபவம் நடைபெற்றது.

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இதன்போது ஜனாதிபதி மரக் கன்று ஒன்றையும் நட்டிவைத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்