விமானங்களின் நேர அட்டவணையில் மாற்றம்

விமானங்களின் நேர அட்டவணையில் மாற்றம்

by Staff Writer 03-06-2018 | 1:13 PM

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் விமானங்களின் நேர அட்டவணைகள் மாற்றப்பட்டுள்ளன.

இந்துசமுத்திரத்தில் நடைபெறவுள்ள பரீட்சார்த்த நடவடிக்கைகளினால் இன்று விமான பயணங்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டதாக ஶ்ரீலங்கன் விமான நிலைய ஊடக பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் கொழும்பிலிருந்து கோலாலம்பூர்,சிங்கப்பூர், பெங்கொக் ஆகிய நாடு மற்றும் நகரங்களுக்கு பயணிக்கும் 11 விமானங்களின் நேர அட்டவணைகள் மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பிலான மேலதிக தகவல்களை 1979 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி அறிந்து கொள்ள முடியும்.