காலி மைதானத்தின் ஆடுகளம் ஏன் அவசரமாக மாற்றப்பட்டது

பணத்துக்காக ஆடுகளத்தின் தன்மையை மாற்றியமை தொடர்பில் நியூஸ் பெஸ்டின் விசேட தொகுப்பு

by Staff Writer 03-06-2018 | 10:50 PM

நாட்டில் நடைபெற்ற சில சர்வதேச போட்டிகளில் பணத்துக்காக ஆடுகளத்தின் தன்மையை மாற்றியதாக கடந்த வாரத்தில் அல்ஜெசீரா அலைவரிசை இரகசியமான முறையில் தகவல்களை திரட்டி செய்தி வெளியிட்டது.

காலி மைதானத்தின் உதவி முகாமையாளராக செயற்பட்ட தரங்க இந்திக்க மற்றும் முதல்தர கிரிக்கெட் தொடரில் விளையாடிய தரிந்து மென்டிஸூக்கு எதிராக இதில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கையெப்பத்துடனான கடிதமொன்றின் மூலம் 15 பேரை காலி சர்வதேச விளையாட்டரங்கின் பணிகளுக்காக நியமிக்கப்பட்டனர். இந்த தருணத்திலேயே இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய டெஸ்ட் போட்டி இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். இந்த நியமனத்தின்போது காலி விளையாட்டரங்கின் செயலாளராக செயற்பட்ட ப்றேமசிறி கொலம்பகேவின் வேண்டுகோள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. எவ்வாறாயினும் 15 வருடங்களாக காலி மைதானத்தின் உடற்பயிற்சி மத்திய நிலையத்தின் உதவியாளராக செயற்பட்ட தரங்க இந்திக்க காலி மைதானத்தின் உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டார். இதனிடையே காலி மைதானத்தின் ஆடுகளம் பணத்துக்காக மாற்றப்பட்டதாக கடந்த 30 ஆம் திகதி அல்ஜெசீரா அலைவரிசை செய்தி வெளியிட்டது சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விசாரணை நடத்தப்படுகின்ற நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் அவசரமாக மைதானத்தின் ஆடுகளத்தை மாற்ற வேண்டிய தேவை யாருக்கு இருந்தது என்பது சிக்கலாகும்/ காலி சர்வதேச விளையாட்டரங்கின் ஆடுகளத்தின் தன்மையை மாற்றியமை தொடர்பில் ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை புறந்தள்ளுவதற்கும் தகவலை மறைப்பதற்கும் முயற்சிக்கின்றமை சந்தேகத்துக்குரிய காரணியாகும். காலி சர்வதேச மைதானத்தின் ஆடுகத்தை அவசரமாக மாற்றியமைப்பதற்கான தேவை என்ன ? விளையாட்டுத்துறை அமைச்சரே இது உங்களின் கவனத்திற்கு...