ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் மைத்திரி வசம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரி தெரிவு : பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட மேலும் பல மாற்றங்கள்

by Staff Writer 03-06-2018 | 3:54 PM
 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை அபே கம வளாகத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, கட்சியின் பதவிகள் மறுசீரமைக்கப்பட்டன. கட்சியின புதிய பொதுச் செயலாளராக பேராசிரியர் ​ரோஹன லக்ஷமன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் பி திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஸ, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்ன ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசனைக்குழுவாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கட்சியின் புதிய சிரேஷ்ட உப தலைவர்களாக நால்வர் தெரிவு செய்யப்பட்டனர். நிமல் சிறிபால டி சில்வா, டப்ள்யூ.டி.ஜே.செனவிரத்ன, அநுர பிரியதர்ஷன யாபா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் சிரேஷ்ட உப தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏ.எச்.எம் பவுசி, கலாநிதி சரத் அமுனுகம, மகிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, ரெஜினோல்ட் குரே, பியசேன கமகே, விஜித் விஜயமுனி சொய்சா, மகிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, ஷான் விஜயலால் டி சில்வா,அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, சரத் ஏக்கநாயக்க, தர்மசிறி தசநாயக்க, இசுறு தேவப்பிரிய, சாமர சம்பத் தசாநாயக்க, லசந்த அலஹியவன்ன, வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சுமேதா ஜி ஜயசேன ஆகியோர் புதிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் ஏனைய நியமனங்கள் எதிர்காலத்தில் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது