அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிப்பு

அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிப்பு

அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2018 | 12:57 pm

அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

இதற்கு முன்னர் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை 35 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன் சந்திர தெரிவித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.

இதேவேளை இம்மாதம் 5,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டில் மூன்று கட்டங்களில் பட்டதாரிகளை சேவைகளில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்