சல்மான் கானை அடித்து உதைப்போருக்கு 2 இலட்சம் பரிசு

சல்மான் கானை அடித்து உதைப்போருக்கு 2 இலட்சம் ரூபா பரிசு

by Bella Dalima 02-06-2018 | 5:37 PM
பாலிவுட் நடிகர் சல்மான் கானை அடித்து உதைப்போருக்கு 2 இலட்சம் (இந்திய) ரூபா பரிசு வழங்கப்படும் என ஹிந்து ஹி ஆகேவின் அமைப்பைச் சேர்ந்த கோவிந்த் பராஷர் என்பவர் அறிவித்துள்ளார். சல்மான் கான் தயாரிப்பில் உருவாகியுள்ள லவ்ராத்ரி திரைப்படம் ஒக்டோபரில் நவராத்திரி பண்டிகை நாளில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், நவராத்திரி பண்டிகையை இழிவு செய்யும் வகையில் லவ்ராத்ரி என தனது படத்திற்கு சல்மான் கான் பெயரிட்டுள்ளதாக கோவிந்த் பராஷர் குற்றம் சாட்டியுள்ளார். லவ்ராத்ரி படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த படம் திரையிடப்பட்டால் போராட்டங்கள் நடத்துவதாகவும் திரையரங்குகளை தீயிட்டுக் கொளுத்துவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் செயற்பட்ட சல்மான் கானை அடித்து உதைப்பவருக்கு 2 இலட்சம் ரூபா பரிசு வழங்கப்படும் எனவும் கோவிந்த் பராஷர் அறிவித்துள்ளார். அவர் இவ்வாறு கூறியிருப்பது சல்மான் கான் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.