நுகர்வுக்கு உதவாத டின் மீன்கள் சந்தையில் விற்பனை

நுகர்வுக்கு உதவாத டின் மீன்கள் சந்தையில் விற்பனை

நுகர்வுக்கு உதவாத டின் மீன்கள் சந்தையில் விற்பனை

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2018 | 4:14 pm

Colombo (News 1st)

நுகர்வுக்கு உதவாத டின் மீன்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

25 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டார்.

கண்டி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் நுகர்வுக்கு உதவாத 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டின் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் 1800 பேர் ஈடுபட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்தது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 74 கொள்கலன்களில் இருந்து தரமற்ற டின் மீன்கள் சுங்கத்தினால் அண்மையில் கைப்பற்றப்பட்டன.

குறித்த 74 கொள்கலன்களையும் மீள அனுப்பி வைக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்