கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும், வருகை தரும் விமானங்களின் நேர அட்டவணைகள் மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும், வருகை தரும் விமானங்களின் நேர அட்டவணைகள் மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும், வருகை தரும் விமானங்களின் நேர அட்டவணைகள் மாற்றம்

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2018 | 3:34 pm

Colombo (News 1st) 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் விமானங்களின் நேர அட்டவணைகள் மாற்றப்பட்டுள்ளன.

இந்து சமுத்திரத்தில் நடைபெறவுள்ள விமான பரீட்சார்த்த நடவடிக்கைகளினால் நாளைய தினம் (03) விமானப் பயணங்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிலைய ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இதன் பிரகாரம், கொழும்பிலிருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர், பேங்காக் பயணிக்கும் 11 விமானங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை 1979 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி அறிந்துகொள்ள முடியும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்