260 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம்

260 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம்: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

by Bella Dalima 01-06-2018 | 8:51 PM
Colombo (News 1st)  இலங்கையில் காணப்படும் 353 தேசிய பாடசாலைகளில் 260 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். சில கல்லூரிகளில் கடமை நிறைவேற்று அதிபர்கள் தான் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், சகல தேசிய பாடசாலைகளுக்கும் அதிபர்களை நியமிப்பது தமது நோக்கம் எனவும் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.  

ஏனைய செய்திகள்