ஸ்பெயின் பிரதமர் வலுக்கட்டாயமாக பதவி நீக்கம்

ஸ்பெயின் பிரதமர் வலுக்கட்டாயமாக பதவி நீக்கம்

by Bella Dalima 01-06-2018 | 7:52 PM
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தமையால் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் (Mariano Rajoy)  வலுக்கட்டாயமாக பதவி நீக்கப்பட்டுள்ளார். ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் பதவி நீக்கப்பட்டமையை அடுத்து, புதிய பிரதமராக தெரிவாகியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பெட்ரோ சேன்ச் செஸ்ஸூக்கு மரியானோ ரஜோய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று நடத்தப்பட்டது. ஸ்பெயின் வரலாற்றில் கடந்த 1977 ஆம் ஆண்டின் பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியை இழக்கும் முதலாவது பிரதமர் இவராவார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 176 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் 180 பேரின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரியானா ரஜோயின் கட்சியை சேர்ந்த சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு 33 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலை தடுக்க முயற்சிக்கவில்லை என்பதால் பிரதமர் பதவியிலிருந்து மரியானோ ரஜோய் விலக வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.