10 சைஸ்மோ மீட்டர்களை வெற்றிகரமாகப் பொருத்திய சீனா

இந்தியப் பெருங்கடலில் 10 சைஸ்மோ மீட்டர்களை வெற்றிகரமாகப் பொருத்திய சீனா

by Bella Dalima 01-06-2018 | 7:02 PM
நில அதிர்வுகளைக் கண்காணித்து அளவிடும் 10 சைஸ்மோ மீட்டர்களை (Seismometer) இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளது. இது குறித்து சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது. சீனாவின் 49-ஆவது பெருங்கடல் ஆய்வுக் குழு, இந்தியப் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் 10 சைஸ்மோ மீட்டர்களை வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளது. கடலின் ஆழமான தரைப்பகுதியில் பொருத்தப்பட்ட இந்த கருவிகளைக் கொண்டு, நில அதிர்வுகள், எரிமலை சீற்றங்கள் ஆகியவற்றின் அளவுகளைக் கணக்கிட முடியும். இதேபோன்று மேலும் 5 கருவிகளை கடலடியில் பொருத்த சீன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, ஏற்கனவே கடலடியில் பொருத்தப்பட்டுள்ள 15 சைஸ்மோ மீட்டர்களை மீண்டும் வெளியே எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. கடலடியில் பொருத்தப்படும் நில அதிர்வுமானிகள் ஓர் ஆண்டு வரை செயற்படும். பிறகு அதனை வெளியே எடுத்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.