அர்ஜூன மகேந்திரனை ஒப்படைக்குமாறு சிங்கப்பூரிடம் கோரிக்கை விடுக்க தீர்மானம்

அர்ஜூன மகேந்திரனை ஒப்படைக்குமாறு சிங்கப்பூரிடம் கோரிக்கை விடுக்க தீர்மானம்

அர்ஜூன மகேந்திரனை ஒப்படைக்குமாறு சிங்கப்பூரிடம் கோரிக்கை விடுக்க தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

01 Jun, 2018 | 3:40 pm

Colombo (News 1st) 

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை விசாரணைகளின் நிமித்தம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தமது கோரிக்கைக்கு பதில் கிடைத்தவுடன், அந்நாட்டின் அனுமதியுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விசேட குழுவொன்றை சிங்கப்பூருக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்தார்.

அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் நால்வர் கொண்ட குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், சிங்கப்பூரில் தங்கியுள்ளமை சர்வதேச பொலிஸாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸின் சிங்கப்பூர் கிளை அதிகாரிகள் இந்த விடயத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 24 ஆம் திகதி அறிவித்தது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சர்வதேச பொலிஸாருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்