தென் மாகாணத்தில் பரவிய வைரஸ் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தென் மாகாணத்தில் பரவிய வைரஸ் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தென் மாகாணத்தில் பரவிய வைரஸ் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Fazlullah Mubarak

04 Jun, 2018 | 7:34 pm

தென் மாகாணத்தில் பரவிய வைரஸ் இன்புளுவென்ஸா – ஏ என அடையாளங் காணப்பட்டுள்ளது

மருத்துவ நிறுவகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தொற்றா நோய் தடுப்பு பிரிவின் விசேட நிபுணர் ஜூட் ஜயகம தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்தில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தென் மாகாணத்தில் பரவிய வைரஸ் காரணமாக 13 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில்,
வைரஸ் தொற்றை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட நிபுணர் ஜூட் ஜயகம தெரிவித்தார்.