இலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டது

இலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டது

இலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2018 | 9:20 am

Colombo (News 1st) காய்ச்சல் காரணமாக கண்டி குண்டசாலையிலுள்ள இலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களிடையே காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கல்லூரியின் பணிப்பாளர் அமல் அருணப்பிரிய குறிப்பிட்டார்.

குண்டசாலையிலுள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் சுமார் 250 மாணவர்கள் கல்வி பயின்று வரும்நிலையில், 11 பேருக்கு காய்ச்சல் பரவியதாக அமல் அருணப்பிரிய கூறினார்.

இவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சல் ஏனைய மாணவர்களுக்கு பரவக்கூடும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியமைக்கமைய கல்லூரியின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.