இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

14 Jun, 2018 | 3:53 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் தொடர்பில் நிஷாந்த ரணதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், மே மாதம் 31 ஆம் திகதி நடத்தப்படவிருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.