இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

14 Jun, 2018 | 4:04 pm

Colombo (News 1st) உள்ளூர் பழ உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புத்தளம் – தலவில பகுதியில் நேற்று (13) மாலை நடைபெற்ற கிராம சக்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாய உபகரணங்களுக்கான தட்டுப்பாடு, உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கிம் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் மக்கள் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.

பழங்களின் இறக்குமதி காரணமாக தமது தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு பழ உற்பத்தியாளர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உற்பத்தியாளர்களிடம் ஜனாதிபதி உறுதி அளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.