எனக்கு பிடித்த நடிகர் தனுஷ்: ஸ்ரீதேவியின் மகள்

எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான்: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி

by Bella Dalima 31-05-2018 | 7:30 PM
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி, இந்தியிலும் சரி, தென் இந்திய மொழிகளிலும் சரி தனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான் என்று கூறியுள்ளார். கடந்த பெப்ரவரியில் துபாய் நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் நடிகை ஸ்ரீதேவி இறந்தார். அவரது மகள் ஜான்வி அறிமுகமாகும் ‘தடக்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், ஜான்வி தனக்குப் பிடித்த நடிகர் தனுஷ் தான் என்றும் அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் அவரது நடிப்பும் தன்னை கவர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.