இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் வௌியீடு

இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் வௌியீடு

by Bella Dalima 31-05-2018 | 7:47 PM
Colombo (News 1st) இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் இன்று வௌியிடப்பட்டது. அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. 92 பிரிவுகளின் கீழ் புதுப்பிக்கப்பட்ட புதிய வரைபடத்தில் கொழும்பு உள்ளிட்ட 70 பிரதான பிரிவுகள் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளதாக நில அளவை ஆணையாளர் பி.எம்.பி. உதயகாந்த தெரிவித்தார். 18 வருடங்களுக்கு பின்னர் இலங்கையின் வரைபடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரில் ஏற்பட்ட அனைத்து மாற்றங்களையும் உள்ளடக்கி புதுப்பிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைபடத்தின் எஞ்சிய 22 பிரிவுகளையும் இந்த வருடத்திற்குள் பூரணப்படுத்தவுள்ளதாக நில அளவை ஆணையாளர் தெரிவித்தார். கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படும் துறைமுக நகரம் உள்ளடக்கப்பட்டதால், இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோமீட்டரினால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.