வௌ்ளத்தினால் அழிவடைந்த ஆவணங்களை மீளப்பெற முடியும்

வௌ்ளத்தினால் அழிவடைந்த ஆவணங்களை மீளப்பெற முடியும்

வௌ்ளத்தினால் அழிவடைந்த ஆவணங்களை மீளப்பெற முடியும்

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2018 | 3:37 pm

Colombo (News 1st)

வௌ்ளத்தினால் அழிவடைந்த ஆவணங்களை மீள பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை குறைப்பதே தமது நோக்கம் என சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ .ஆர். டி சில்வா குறிப்பிட்டார்.

ஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கு உதவி தேவைப்படும் பட்சத்தில், எழுத்து மூலம் அறிவிக்க முடியும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

செயலாளர்,
நிவாரணப்பணி,
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,
கொழும்பு 12

என்ற முகவரிக்கு எழுத்து மூலம் அறிவிக்க முடியும்.

அல்லது 0777 235363 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பினை ஏற்படுத்த முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்