மடிக்கணினி பாவிக்கத் தெரியாத அமைச்சர்கள் பதவி நீக்கப்படுவர்: நேபாள பிரதமர் அறிவிப்பு

மடிக்கணினி பாவிக்கத் தெரியாத அமைச்சர்கள் பதவி நீக்கப்படுவர்: நேபாள பிரதமர் அறிவிப்பு

மடிக்கணினி பாவிக்கத் தெரியாத அமைச்சர்கள் பதவி நீக்கப்படுவர்: நேபாள பிரதமர் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2018 | 6:44 pm

மடிக்கணினியை பாவிக்கத் தெரியாத அமைச்சர்களை 6 மாதங்களில் பதவி நீக்கம் செய்யவுள்ளதாக நேபாள பிரதமர் அறிவித்துள்ளார்.

தமது அமைச்சரவையில் உள்ள புதிய அமைச்சர்கள் அனைவரும் மடிக்கணினியைக் கையாள்வது தொடர்பில் 6 மாதங்களுக்குள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கற்றுக்கொள்ளத் தவறும் பட்சத்தில் அவர்கள் அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்படுவார்கள் எனவும் நேபாள பிரதமர் K.P. ஷர்மா ஔி தெரிவித்துள்ளார்.

ஷர்மா ஔி கடந்த பெப்ரவரி மாதம் நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார் .

இது இவர் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட இரண்டாவது சந்தர்ப்பம் ஆகும்.

பிரதமர் அலுவலகத்தை இன்னும் 6 மாதங்களுக்குள் கடதாசி பாவனையற்ற அலுவலமாக மாற்றுவதாகவும் நேபாளப் பிரதமர் திடசங்கற்பம் பூண்டுள்ளார்.

நேபாள தேசிய ஆசிரியர் ஒருங்கமைப்பின் 12 ஆவது வருடாந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைக்கூட்டத்திலும் அறிவித்துள்ளதாக நேபாளப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்