நாட்டில் சட்டவாட்சி நிலைநாட்டப்பட்டுள்ளது: ஜனாதிபதி மகிழ்ச்சி

நாட்டில் சட்டவாட்சி நிலைநாட்டப்பட்டுள்ளது: ஜனாதிபதி மகிழ்ச்சி

நாட்டில் சட்டவாட்சி நிலைநாட்டப்பட்டுள்ளது: ஜனாதிபதி மகிழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2018 | 9:01 pm

Colombo (News 1st) 

கடந்த மூன்றரை வருடங்களில் நாட்டில் சட்டவாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வத்தளை புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த கட்டடத் தொகுதிக்காக 275 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிபதிகளின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட மேலும் பல பிரச்சினைகளை சமர்ப்பிக்க விசேட பிரிவொன்றை அமைப்பதாக உறுதி கூறினார்.

அதற்காக உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மூவர் அடங்கிய குழுவை நியமிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்