சோமாலிலாந்தில் நிர்க்கதிக்குள்ளான 12 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

சோமாலிலாந்தில் நிர்க்கதிக்குள்ளான 12 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

சோமாலிலாந்தில் நிர்க்கதிக்குள்ளான 12 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2018 | 4:42 pm

Colombo (News 1st)

ஆப்பிரிக்க நாடான சோமாலிலாந்திற்கு தொழில் நிமித்தம் சென்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட 12 இலங்கை பிரஜைகள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.

நிறுவனத்தின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, குறித்த 12 பேரும் நாடு திரும்பியதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் கீர்த்தி முத்துக்குமார தெரிவித்தார்.

12 பேரையும் சோமாலிலாந்துக்கு அனுப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிற்கு வருகை தந்த 12 பேரிடமும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தூதுவர்கள் அல்லாத நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் போது, அவதானமாக செயற்படுமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்