கொலைக் குற்றவாளிகள் மூவருக்கு காலி மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை

கொலைக் குற்றவாளிகள் மூவருக்கு காலி மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை

கொலைக் குற்றவாளிகள் மூவருக்கு காலி மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2018 | 4:52 pm

Colombo (News 1st​) 

கொலைக் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்ட மூவருக்கு காலி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி தெலிகட பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரும் அடங்குகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்