காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்: நாளை முதல் மழையும் அதிகரிக்கும்

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்: நாளை முதல் மழையும் அதிகரிக்கும்

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்: நாளை முதல் மழையும் அதிகரிக்கும்

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2018 | 4:00 pm

Colombo (News 1st)

நாடு முழுவதும் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனடிப்படையில், மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் கேகாலை மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை முதல் மழையுனான வானிலை அதிகரிக்கும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டார்.

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் கடற்சார் ஊழியர்களும் மீனவர்களும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்