அச்சுவேலியில் 23 வருடங்களாக இராணுவம் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு

அச்சுவேலியில் 23 வருடங்களாக இராணுவம் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு

அச்சுவேலியில் 23 வருடங்களாக இராணுவம் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2018 | 5:17 pm

Colombo (News 1st)

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

23 வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்களுக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியே இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

9 குடும்பங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் காணி கடந்த 1995 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டது.

இதில் 6 குடும்பங்களுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்