by Bella Dalima 30-05-2018 | 3:33 PM
Colombo (News 1st)
மரக்கறிகளின் விலை துரிதகதியில் அதிகரித்து வருகிறது.
தம்புளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் சந்தையிலும் நேற்று (29)அதிக விலையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் விற்பனை மற்றும் விவசாய உற்பத்தி தொடர்பிலான சிரேஷ்ட அதிகாரி துமிந்த பிரியதர்ஷன கருத்துத் தெரிவித்தார்.
இந்த விலையேற்ற நிலை அடுத்த மாதம் வரை தொடரும் என அவர் குறிப்பிட்டார்.