குடும்பத்தாரை வெட்டிக் காயப்படுத்தியவர் தற்கொலை

பிங்கிரியவில் குடும்பத்தாரை வெட்டிக் காயப்படுத்தியவர் தற்கொலை

by Bella Dalima 30-05-2018 | 4:12 PM
Colombo (News 1st)  பிங்கிரிய - இஹல கடிகமுவ பகுதியில் தனது குடும்ப உறுப்பினர்கள் நால்வரை வெட்டிக் காயப்படுத்தியவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் இந்த சம்பவம் இன்று பகல் 1.35 அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தனது மனைவி, தாய், தந்தை மற்றும் 6 மாதக் குழந்தை ஆகியோரை குறித்த நபர் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். சிறிது காலம் வீட்டிலிருந்து வௌியேறியிருந்த இவர் இன்று முற்பகல் வீட்டிற்கு சென்று, இந்த குற்றச்செயலை மேற்கொண்டதாக பொலிஸார் கூறினர்.