நீரேந்துகைகளில் எதிர்பார்த்தளவில் அதிகரிப்பு ஏற்படவில்லை: நீர்ப்பாசனத் திணைக்களம்

நீரேந்துகைகளில் எதிர்பார்த்தளவில் அதிகரிப்பு ஏற்படவில்லை: நீர்ப்பாசனத் திணைக்களம்

நீரேந்துகைகளில் எதிர்பார்த்தளவில் அதிகரிப்பு ஏற்படவில்லை: நீர்ப்பாசனத் திணைக்களம்

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2018 | 3:44 pm

Colombo (News 1st) 

கடந்த நாட்களில் பெய்த கடும் மழையின் பின்னர் நீர்த்தேக்கங்களின் நீரேந்துகைகளில் எதிர்பார்த்தளவில் அதிகரிப்பு ஏற்படவில்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது.

40 வீதமான நீர்த்தேக்கங்களில் 49 வீத நீரேற்றம் காணப்படுவதாக நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் வசந்த பண்டார பளுகஸ்வெவ தெரிவித்தார்.

கடந்த நாட்களில் 10-ற்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதாகவும் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

எனினும், அதிகளவிலான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இன்னமும் குறைவாகவே காணப்படுவதாக நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் வசந்த பண்டார பளுகஸ்வெவ சுட்டிக்காட்டினார்.

இந்த நிலை காரணமாக யால பருவ செய்கையை 45 வீதம் வரை மட்டுப்படுத்த வேண்டிய நிலை காணப்படுவதாகவும் வசந்த பண்டார பளுகஸ்வெவ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மகாவலி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 80 வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதன் காரணமாக யால பருவ வேளாண்மையில் ஒரு இலட்சம் ஹெக்டெயரில் நெற்செய்கை மேற்கொள்ள முடியும் என இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் சரத் சந்திரசிறி குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்