சீனன்குடா துறைமுகத்தில் இருந்து தலைமறைவாகிய விமானப்படை மருத்துவப்பீட சிப்பாய்க்கு விளக்கமறியல்

சீனன்குடா துறைமுகத்தில் இருந்து தலைமறைவாகிய விமானப்படை மருத்துவப்பீட சிப்பாய்க்கு விளக்கமறியல்

சீனன்குடா துறைமுகத்தில் இருந்து தலைமறைவாகிய விமானப்படை மருத்துவப்பீட சிப்பாய்க்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2018 | 4:05 pm

Colombo (News 1st) 

திருகோணமலை – சீனன்குடா துறைமுகத்தில் இருந்து தலைமறைவாகிய விமானப்படை மருத்துவப் பீடத்தின் சிப்பாய் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்றிரவு திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை மருத்துவப்பீடத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை துப்பாக்கியுடன் தலைமறைவாகியதாக விமானப்படை பேச்சாளர் க்ரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், விமானப்படையும் விசாணைகளை முன்னெடுத்திருந்தது.

இதற்கமைய சந்தேகநபரான குறித்த சிப்பாய் நேற்று மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்