MH370-ஐ தேடும் பணிகள் உத்தியோகப்பூர்வமாக நிறுத்தம்

MH370-ஐ தேடும் பணிகள் உத்தியோகப்பூர்வமாக நிறுத்தம்

by Bella Dalima 29-05-2018 | 4:21 PM
காணாமற்போன மலேசிய விமானம் MH370 ஐ தேடும் பணிகளை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக நிறுத்தியுள்ளது. குறித்த நிறுவனம் 90 நாட்கள் தேடலில் ஆழ்கடல் கலன்களைப் பயன்படுத்தியது. எனினும், எதனையும் கண்டறிய முடியவில்லை என நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாயமான விமானத்தை புதிதாகத் தேடும் திட்டம் எதுவும் இல்லை என மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 239 பயணிகளுடன் சென்ற போயிங் 777 வகை விமானம் காணாமற்போனது. விரிவான தேடலுக்குப் பின்னர் குறித்த விமானத்தின் மத்திய பகுதிகளின் தடயங்கள் எதுவும் தென்படவில்லை. விமானம் கட்டுப்பாடற்ற வகையில் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்திருக்கலாம் என 2016 ஆம் ஆண்டில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. MH370 தேடுதலில் ஈடுபட்ட சீனக் கப்பலும் 2016 இறுதியில் முயற்சியைக் கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.